காதலியின் திருமணத்தில் மணமகள் வேடத்தில் சென்று உறவினர்களிடம் சிக்கிய காதலன்!!

இந்தியாவில் காதலியின் திருமணத்தில் காதலன், மணப் பெண் போன்று சென்று சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் Bhadohi பகுதியிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த இளைஞன் யார்? அவருடைய பெயர் என்ன என்பது குறித்த எந்த ஒரு விவரமும் வெளியாகவில்லை.

   

ஆனால், அந்த இளைஞன் காதலித்த பெண்ணிற்கு பெற்றோரால் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான வேலைகள் நடந்துள்ளது. அதன் படி திருமண நாளான்று காதலியிடம் எப்படியாவது சென்று பேசி, இந்த திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த இளைஞன், பெண் வேடமிட்டு சென்றுள்ளார்.

 

அதாவது அசல் மணப் பெண் போன்று, சிவப்பு நிற சேலை, கழுத்தில் சில கவரிங் நகைகள், சரிகை முடி மற்றும் ஒரு ஹேண்ட் பேக் என்று, திருமண வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, இவர் அங்கிருந்தவர்களிடம் தொடர்ந்து, மணப் பெண் அறை எங்கே இருக்கு, எங்கே இருக்கு, என்று கேட்டபடி இருந்துள்ளார். இதனால் ஒரு சிலருக்கு இவர் மீது சந்தேகம், வர, அப்போது அவரின் முகத்தை பார்க்க முற்பட்ட போது, போலி முடி கீழே விழுந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். ஆனால், அதன் பின் என்ன நடந்தது என்பது தெரியவில்லை, இந்த காட்சியை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். திருமணம் நடந்ததா? இளைஞனுக்கு என்ன ஆனது என்பது குறித்து எந்த ஒரு விவரமும் தற்போது வரை வெளியாகவில்லை.