பிக்பாஸ் சீசன் 3 மூலமாக தமிழ் திரையுலகிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தவர் நடிகை வனிதா. இவர் திரையுலகில் முதன் முதலில் தளபதி விஜய் நடித்து வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை வனிதாவிற்கு ஒரு மகன் மற்றும் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் வனிதாவிற்கு பிறந்த மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி. இந்நிலையில் வனிதாவின் மூத்த மகன் விஜய் ஸ்ரீ ஹரி தமிழ் சினிமாவில் வெளிவந்த பிரபல படம் ஒன்றில் நடித்துள்ளார்.
ஆம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த ச குனி படத்தில் தான் வனிதாவின் மூத்த மகன் கார்த்தியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது படத்தில் உள்ள காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.