குக்கூ பாடலுக்கு கு த்தாட்டம் போட்ட கேரள போலிஸ்! என்ஜாயி எஞ்சாமியின் புதிய வெர்ஷன்.. தெ றிக்கவிடும் காட்சி

சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு மற்றும் தீ இருவரும் பாடிய பாடல் என்ஜாயி எஞ்சாமி பாடல்.இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹி ட் அ டித்த தனிப்பாடல்களுல் மிகவும் முக்கியமான பாடலாக இந்த பாடல் மாறியிருக்கிறது.

   

எங்கு பார்த்தாலும் இந்த பாடல்தான் வைரலான பாடலாக சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மாஜா வெளியீட்டில் இந்த பாடல் இன்னும் தன்னுடைய வைரல் தன்மையிலிருந்து நீங்கிப் போகவில்லை.

இன்னும் டிரெண்டிங் இருக்கும் பாடல்களுல் இந்த பாடல் முக்கியமான பாடலாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் பலரும் இந்த பாடலில் தங்களுடைய வெ ர்ஷனை புகுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் இந்த பாடல் பரவலாக அறியப்பட்டு வைரலாகி வருகிறது.

அதில் தற்போது கேரளா போலீஸ் இந்த பாடலை கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை மையப்படுத்தி மாற்று வரிகளை பாடி அதற்கு வீடியோ உருவாக்கி அதில் நடித்து நடனமாடி பகிர்ந்து இருக்கின்றனர்.இந்த வீடியோ அனைவரிடத்திலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.