விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோ மாளி’. சமையல் நிகழ்ச்சியான இதில் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் கோ மாளிகளின் சே ட்டைகளைச் சகித்துக் கொண்டு சமைத்து முடிக்க வேண்டும்.
இதில் கோ மாளிகளாக புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, தங்கதுரை உள்ளிட்டோர் இடம் பெற்றனர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால் இரண்டாவது சீசனுக்குப் பெரும் வரவேற்பு நிலவியது. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இரண்டாவது சீசனில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷகிலா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரசிகர்களின் வ ற்பு றுத்தலால் இந்நிகழ்ச்சி இந்த ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டது. வாரந்தோறும் இந்நிகழ்ச்சியை பற்றி மீம்களும் கோ மாளிகளின் நகைச்சுவை வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தன.
இந்நிலையில் இந்த சீசனின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அஸ்வின், ஷகிலா, கனி, பவித்ரா, பாபா பாஸ்கர் ஆகியோர் இடம் பெற்றனர். இதில் வெற்றியாளராக கனி அறிவிக்கப்பட்டார். அவருக்கு 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அவருடன் கோ மாளியாக இருந்த சுனிதாவுக்கு 1 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டது. ஷகிலா மற்றும் அஸ்வின் இருவரும் ரன்னர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கனி இயக்குனர் திருவை எப்போதோ திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.தனது இரு மகள்களுடன் அழகிய புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.