குக் வித் கோ மாளி 2 நிகழ்ச்சியில் காரக் குழம்பு ஸ்பெஷல் என்கிற பெயர் கொண்டவர் கனி. இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் இயக்குனர் திருவை திருமணம் செய்துகொண்டார்.
இருவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளார்கள். கனி குக் வித் கோ மாளி நிகழ்ச்சிக்கு முன் எப்போதோ மக்கள் தொலைக்காட்சியில் தமிழ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்திருக்கிறார்.

தற்போது கனி யார் என்றாலே குக் வித் கோ மாளியில் கலந்துகொண்டவர் என சின்ன குழந்தை கூட கூறும் அளவிற்கு நல்ல ரீச் பெற்றுவிட்டார்.
என்ன தான் மற்றவர்கள் காரக் குழம்பு செய்பவர் என்று கி ண்டலடித்தாலும் இறுதி நிகழ்ச்சியில் அசத்தலான சமையல் செய்து குக் வித் கோ மாளி 2 பட்டத்தையும் வென்றார்.
தற்போது அவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் திருமணத்தின் போது எப்படி உள்ளார் என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.