குக் வித் கோ மாளி ஷோவால் அஷ்வினுக்கு தொடர்ந்து அ டிக்கும் ஜாக்பாட்- படு குஷியில் ரசிகர்கள்

குக் வித் கோ மாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் அஷ்வின்.இவரின் எதார்த்தமான பேச்சு பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

   

இந்த நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்த நிலையில், இதில் பங்கேற்ற கோ மாளி மற்றும் குக்குகளுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில், அஷ்வினை கதாநாயகனாக வைத்து மூன்று படங்கள் தயாரிக்கப்பட உள்ளது. மேலும், அவருக்கு மொத்தமாக 3 திரைப்படத்துக்கு 30 லட்சம் சம்பளம் கொடுத்து தயாரிப்பாளர் டிரைடண்ட் ரவீந்தரன் கமிட் செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்திலும் அவர் நாயகனாக நடிக்க உள்ளாராம். இதனால் அஷ்வின் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் கொண்டாட்டத்தில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.