குறும்பு செய்துவிட்டு அம்மாக்கு ஐஸ் வைத்த சிறுவன்.. கடைசியில் நடந்த தரமான சம்பவம்..!

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என வள்ளுவரும் பாடுகிறார்.

   

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கேயும் அப்படித்தான்…குழந்தைகளே அழகு. அதிலும் அவர்கள் தன்னை மறந்து செய்யும் செயல் பேரழகுதானே? இங்கேயும் அப்படித்தான் ஒரு பொடியன் திடீரென தன் அம்மாவிடம் வந்து ஐஸ் வைக்கிறான். அதிலும் வண்டி, வண்டியாக அவன் ஐஸ் வைத்தான்.

அம்மா என் செல்லக்குட்டியில்ல..புஜ்ஜூ குட்டியில்ல..இன்னிக்கு அழகா இருக்க எனசொன்னான். உடனே அவனது அம்மா, அழகா இருக்கேனா எனக் கேட்கிறார். நீ என்ன பண்ண? என மகனின் திடீர் கொஞ்சலை புரிந்து கொண்டு கேட்கிறார். உடனே பையன் நான் ஏதும் பண்ணல. சைக்கிள்ல போயிட்டே இருந்தேன் டொப்புன்னு கீழே விழ்ந்துடுச்சு. டயர் வெடிச்சுடுச்சு. டயர் மாத்த காசு தா..என கேட்கிறான். இந்த கால பொடிசுகள் தாயைக் கூட எப்படி நேக்காக ஏமாத்த வேண்டும் என தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.