தென்னிந்திய சினிமாவில் நடிகர் ஆவது என்பதே சிரமமான ஒன்றாக இருக்கும் நிலையில் அதுவும் அக்ஷன் மற்றும் மாஸ் ஹீரோவாவது என்பது மிகவும் இயலாத ஒன்று. பல படங்களில் கதாநாயகனாக நடித்தும் இன்றளவும் அந்த பெயருக்கு ஏங்கி வரும் பிரபல நடிகர்கள் பலர் இப்படி இருக்கையில் நடித்த முதல் படத்திலேயே உலக அளவில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தவர் தான் பிரபல கன்னட நடிகர் யாஷ். கன்னட சினிமாவில் சின்னத்திரைகளில் கதாநாயகனாக நடித்து வந்த இவரது இயற்பெயர் நவீன்குமார் கவுடா. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த யாஷ் தனது கல்லூரி படிப்பை முடித்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பிரபல நாடக கலைஞர் பி.வி.காரந்த் உருவாக்கிய பெனகா நாடக குழுவில் சேர்ந்து சிறு கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
இதன் பின் இவரது தோற்றம் மற்றும் நடிப்பின் காரணமாக அந்த நாடகங்களில் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் மூலம் மக்களிடையே நன்மதிப்பை பெற்ற யாஷ் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.
இவ்வாறான நிலையில் இவருக்கு வெள்ளித்திரையில் தனது வருங்கால மனைவியான ராதிகாவுக்கு ஜோடியாக துணை கதாபாத்திரத்தில் நடித்தார். மொஷ்ணா மனசு இந்த படம் தான் யாஷ்க்கு திரையுலகில் அடையாளத்தை பெற்று கொடுத்த முதல் திரைப்படம்.
பிரபல கன்னட ஹீரோ யஷ். கே.ஜி.எஃப் படம் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமானவர். இந்தப் படம் கன்னடம், தமிழ் உட்பட 5 மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
படம் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தில் இப்போது நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி, ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்தில் சின்ன வயசு ராக்கி பாயாக நடித்த பையன் இப்போ இப்பிடி மாறிற்றார் பாருங்க..