கேப்டன் விஜயகாந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? இதுவரை யாரும் பார்த்திராத அழகிய ஜோடியின் புகைப்படம்

தமிழ் சினிமாவை முன்னணி நட்சத்திரமாக மக்களின் பேராதரவுடன் ஆண்டு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமல் என இரு மிகப்பெரிய நடிகர்கள் இருந்த நிலையிலும் தன்னுடைய தனித்தமையால் முன்னணி நட்சத்திரமானார் இவர். தமிழ் சினிமாவில் இனிக்கும் இளமை என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், புலன் விசாரணை, உண்மை விழிகள், சொக்கத் தங்கம் போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

   

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இரண்டு ஆளுமைகளும் இருந்தும், தனது தனித்தன்மை வாய்ந்த நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகர் விஜயாகாந்த். இவர் தற்போது திரையுலகில் இருந்து விலகி இருந்தாலும், தற்போது வரை தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை துளி அளவுகூட மறக்காமல் இருக்கின்றனர். தமிழில் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிதத்திற்கு பிறகு ரசிகர்களால் அன்புடன் கேப்டன் என்று அழைக்கப்பட்டர். படங்களில் வருவது போல நிஜத்திலும் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

படங்களில் நடிப்பதில் இருந்து விலகி அரசியல் காட்சி ஆரம்பித்தார். அக்காட்சிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் பெயர் வைத்தார். நடிகர் விஜயகாந்த், பிரேமலதா என்பவரை 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஷண்முக பாண்டியன், விஜய் பிரபாகர் என இரு மகன்கள் உள்ளார். இவ்விருவருக்கும் திருமணமும் ஆகிவிட்டது. இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் திருமண புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..