இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்காணோர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதேபோல் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் லாக்டவுண் போடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பா திக்கப்பட்டவர்களுக்கு உடல் அளவிலும், அவர்களது குடும்பத்தினருக்கு மனதளவிலும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல் ஒரேநேரத்தில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் சிகிட்சைக்கு வருவதால் பெட், ஆக்சிஜன் வசதி ஆகியவை கிடைப்பதிலும் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் அப்படி கஷ்டப்பட்டு பெட் கிடைத்த வாலிபர் ஒருவர் தான் பூரண குணமடைந்ததும், தனக்கு சிகிட்சை கொடுத்த மருத்துவரோடு சேர்ந்து கொரோனா வார்டிலேயே செம ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அந்த வாலிபர் ஆடிவிட்டு ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு ஆக்சிஜன் அளவு 75 ஆகிவிட்டது. நுரையீரலிலும் 18/25 சதவிகிதம் பாதிப்பு இருந்தது. எனக்கு பெட் கிடைக்கவில்லை. 300 கிலோ மீட்டர் தூரம் பயணித்துத்தான் பெட் கிடைத்தது. ஒருவாரம் சிகிட்சையில் இருந்து மீட்டனர். மன ரீதியாக அங்கு இருப்போரை தைரியப்படுத்தவே ஆடினேன். என அவர் உற்சாகமாக தெரிவித்துள்ளார். இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்கள்.
Kumar was critical when we received a request to help him find a bed. 7 days later he sent us his victory dance against Covid just before getting discharged from the Hospital. #ERTStories #Bengaluru pic.twitter.com/pPU5Hg5OjW
— ERT Bangalore (@ErtBangalore) May 25, 2021