கொரோனா வார்டில் மனைவி : பிறந்து 5 நாள் குழந்தையுடன் வெளியில் காத்திருக்கும் கணவன்!!

இந்தியாவில் மனைவி கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை அறைக்கு வாசலில் கணவன் 5 நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தையுடன் காத்திருந்த சம்பவம் மனதை உருக்கியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் செக்கண்டிராபாத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணா – ஆஷா தம்பதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் காந்தி மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

   

ஏற்கனவே ஆஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆஷா சிகிச்சை பெறும் அறைக்கு வெளியில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணா தனது குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறார்.

மனைவி விரைவில் குணமாகி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார். குழந்தைக்கு தண்ணீர் மற்றும் பால் பவுடர் மட்டுமே ஏற்பாடு செய்ய முடிவதாக கிருஷ்ணா கூறுகிறார்.

இந்த நிலையில் சில தன்னார்வலர்கள் சேர்ந்து கிருஷ்ணாவை இன்று அவரின் கிராமத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.