‘சர்வைவர்’ புகழ் காயத்ரி ரெட்டிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..! இணையத்தில் வெளியான ஜோடியின் புகைப்படம் இதோ..

காயத்ரி ரெட்டி, இவர் அட்லீ இயக்கத்தில் மற்றும் நடிகர் விஜய்யின் “பிகில்” படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து இருந்தவர். அந்த படம் மூலமாக அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பிறகு இவர் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் “சர்வைவர்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

   

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த ஆண்டு தான் ஒளிபரப்பானது, பல பிரபலங்களில் இந்த நிக்லஸியில் கலந்துகொண்டனர். மேலும், அந்த ஷோவில் அவர் ஆரம்பத்திலேயே வெளியேறினாலும் இரண்டாம் உலகம் என்ற தீ வில் மேலும் பல வாரங்கள் இருந்தார் காயத்ரி ரெட்டி. அதற்கு அவர் அதிக அளவு பாராட்டுகளையும் பெற்றார்.

இந்நிலையில் தற்போது காயத்ரி ரெட்டி-க்கு திடீரென தனக்கு, நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என கூறி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். கடந்த ஏப்ரல் 29ம் தேதி தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ..