விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா என அடுத்தடுத்து போட்டியாளர்கள்,
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது மிகவும் கஷ்ட்டமான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் வீட்டில் உள்ள சிலர் அரச கெட்டப்பிலும் சிலர் பணியாளர்களாகவும் வேடமிட்டுள்ளனர்.
டாஸ்க் நடந்து கொண்டிருக்கும்போது படைத்தளபதி அசீம், ராஜ குரு விக்ரமனை பார்த்து உங்களுக்கு சாப்பாட்டில் எச்சி து ப்பி கொடுப்பேன் சாப்பிடுவியா என மோசமான வகையில் பேசி உள்ளார். அதனால் விக்ரமன் கடுப்பாக இருவருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram