80களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகியாக இருந்த நடிகை ராதிகா 1999-க்கு பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார். சினிமா போன்று சின்னத்திரையிலும் பெரும் வரவேற்பை பெற்ற ராதிகா சன்டிவியில் கடந்த 1999- முதல் 2001-வரை ஒளிபரப்பான சித்தி தொடரின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் தமிழக மக்களின் மனதில் ஆழமாக பதிந்தது. இந்த சீரியலில் நடித்த அனைவருக்குமே ரசிகர்கள் மனிதில் நீங்கா இடம் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே மற்றும் இரண்டை வேடங்களில் வாணி ராணி என அனைத்து சீரியல்களிலும் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனால் ராதிகா அடுத்து எந்த சீரியலில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், 22 வருடங்களுக்கு பிறகு சித்தி தொடரின் 2-ம் பாகமாக சித்தி 2 சீரியலை தயாரித்து நடிக்க தொடங்கினார்.
கடந்த ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் தற்போது 230 எபிசோடுகளை கடந்துள்ளது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ராதிகா திடீர் அறிவிப்பினை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில் ராதிகாவின் கதாபாத்திரத்திற்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாகவும், இவர் நடித்தால் மட்டுமே ராதிகாவின் இடத்தினை முழுவதுமாக நிரப்ப முடியும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.