சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகர் ஜீவன்..! தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? வியப்பூட்டும் உண்மை தகவல் உள்ளே..

நடிகர் ஜீவன் தமிழில் 2002ஆம் ஆண்டு வெளியான யுனிவர்சிட் டி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். மேலும் அந்த படம் இவருக்கு வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த படம்.

   

அந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த திருட்டுப்பயலே நான் அவனில்லை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் நடிகர் ஜீவன்.

அதன் பின்னர் ஹீரோவாக நடிக்க மச்சகாரன் போன்ற படங்களில் தோல்வி படமாக அமைந்தது. இறுதியாக தமிழில் 2015ஆம் ஆண்டு அதிபர் என்ற படத்தில் நடித்திருந்தா ர். இந்த நிலையில் ஜீவன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அசரீரி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

புதுமுக இயக்குனர் ஜிகே இயக்குனர். மேலும் இந்த படத்திற்காக மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் அறிவியல் எவ்வாறு ஒரு குடும்பத்திற்கு ஒரு உணர்வு போராட்டத்தை உருவாகிறது என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது…