சினிமாவில் என்ன தான் வில்லனாக நடித்தாலும், இதுவரை கிசு, கிசுவிலேயே சிக்காத நடிகர்..! யார் தெரிகிறதா..?

நடிகர் நெப்போலியன், கிராமத்து கதைக் மற்றும் கதாபாத்திரங்களுக்கு ஆச்சு அசலை அப்படியேய் பொருத்தமான ஒரு நடிகர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை பற்றிய அறிமுகம் தேவை இல்லை என்று சொல்ல்லாம். “புது நெல்லு புது நாத்து” படத்தின் மூலம் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் தமிழ்சினிமாவுக்குள் என்ட்ரி ஆனவர் இவர்.

   

இவரது மனைவி ஜெயசுதா. இவருக்கு தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் என இருமகன்கள் உள்ளனர். தற்போது இவர் குடும்பத்துடன் அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் வசித்து வருகிறார். தற்போது ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்னும் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கோர்ட்னி மேத்யூஸ், ஷீனா மோனின் ஆகியோர் நடிக்க டேனியல் இயக்கியுள்ளார்.

மேலும், நடிகர் நெப்போலியன் அரசியல், சினிமா என பிஸியாக இருந்தபோதே தன் மகனின் சிகிட்சை, படிப்புக்காக அமெரிக்காவுக்கு போய் குடியேறி இருந்தார். இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகர் நெப்போலியன் இதுவரை எந்த கிசு,கிசுவிலும் சிக்கியதே இல்லை.

மேலும், இரவு பார்ட்டி, நடிகைகளுடன் கிசு, கிசு என எந்த சர்ச்சையிலும் சிக்காமலே இண்டஸ்ட்ரியில் இன்னும் தனக்கான நல்ல பெயரைத் தக்க வைத்திருப்பவர் நெப்போலியன். இந்நிலையில் அவரது இளமைக்கால புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.