சினேகன் – கன்னிகா முதலாம் ஆண்டு திருமண நாள்…. இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ இதோ….

தமிழ் திரை உலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர்கிட்டத்தட்ட 700 க்கும் மேற்பட்ட படங்களில் 2500 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அவரின் பாடல்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

   

இவர் பாடலாசிரியராக மட்டுமல்லாமல் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி மாநில செயலாளர் ஆகவும் உள்ளார். இவரும் நடிகை கன்னிகா ரவியும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவே கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி சென்னையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

அவர்களின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை இருவரும் மகிழ்ச்சியாக கொண்டாடினர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.