சியான் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை..! எந்த படத்தில் தெரியுமா..?

திரையுலகில் முதன் முதலாக விளம்பர திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு டப்பிங் ஆர்டிஸ்டாக பல்வேறு திரைப்படங்களில் பிரபல நடிகர்களுக்கு குரல் கொடுத்து தன்னுடைய திறனை திரையுலகில் வெளிகாட்டியவர்தான் நடிகர் விக்ரம்.இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பாலாவின் இயக்கத்தில் நடித்ததன் பிறகாக அவருடைய லெவலே மாறிவிட்டது.

   

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்த நமது நடிகர் தற்போது கோப்ரா எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது முழு படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் ஆனது மிகவும் வித்தியாசமாக இருப்பதன் காரணமாக ரசிகர் மத்தியில் இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.

இதனை தொடர்ந்து தற்போது விக்ரம் 65எனும் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விக்ரம் இந்த திரைப்படத்தில் தன்னுடைய மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடித்துள்ளாராம். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கி வருகிறார்.

அறிமுக இயக்குனர் ஒரு படம் ஹிட் கொடுத்தாலே அவர்களின் படத்தை பார்க்க ரசிகர்கள் முன் வந்துவிடுவார்கள் அதுவும் பல மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் முன்னணி நடிகரை வைத்து திரைப்படம் இயக்கினாலே அங்கு கூட்டம் அலைமோதும் அந்தவகையில் பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கி வெற்றி கண்ட கார்த்திக் சுப்புராஜ் திரைப்படம் என்றால் சும்மாவா ரசிகர்களின் எதிர்பார்ப்பும் எகிறிவிட்டன.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ஒருவர் விக்ரமுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படம் தாண்டவம் திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.