“வததந்திகள் எங்களை கஷ்ட்டப்படுத்துகிறது”… தனது அப்பாவின் நிலை குறித்து பதிவிட்டுள்ள மகன் துருவ் விக்ரம்..

தமிழில் 1990ஆம் ஆண்டு வெளியான ‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் விக்ரம். இதன்பின் பல திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகியிருந்தாலும், பாலா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான “சேது” படம் தான் சூப்பர் ஹிட்டானது, என்று தான் சொல்ல வேண்டும்.

   

இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகர் விக்ரம் அவர்கள் மேலும் இதனை தொடர்ந்து தில், தூள் சாமி, பிதாமகன், அருள், அந்நியன் என பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விக்ரம் அவர்கள்.

நடிகர் விக்ரம் 1992ஆம் ஆண்டு சைலஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகன் நடிகர் துருவ் விக்ரம், மகள் அக்ஷிதா விக்ரம் என்று இரு பிள்ளைகள் உள்ளனர் , நடிகர் விக்ரமிற்கு லேசான வலி ஏற்பட்டதினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன .,