சீரியல் நடிகை காயத்ரி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. வாயை பிளந்து பார்க்கும் இணையவாசிகள்..

பிரபல சீரியல் நடிகையாக தற்போது வலம் வந்துகொண்டிருப்பவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ் அவர்கள். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்ற தொடரில் முத்தழகு கதாபாத்திரம் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலம் அடைந்தவர் இந்த காயத்ரி.

   

மேலும், பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ள இவர், வில்லி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துள்ளார். தற்போது, “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, சித்தி 2 சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர், யுவராஜ் என்னும் நடன கலைஞரை திருமணம் செய்து, இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் உள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் காயத்ரி, தனது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் ஒரு சில போட்டோசை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)