‘ஆஹா கல்யாணம்’ என்கிற ஒரே தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியிருக்கும் ஒருவர் தான் பவி டீச்சர் என்கிற பிரிகிடா சகா. தளபதி 64 படத்தைத் தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷின் புதிய படம் ஒன்றிலும் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார் அவர். கடலோரக் கவிதைகளின் ஜெனிஃபர் டீச்சர், மலையாள பிரேமம் படத்தின் மலர் டீச்சர்களுக்கு இணையாக சமீபத்திய ஃபேமஸ் டீச்சர் என்றால் அது பவி டீச்சர் தான்.
மேலும், பிக்பாஸ் புகழ் முகென் ராவ் ஹீரோவாக நடிக்கும் “வேலன்” படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் இவர். யார் க ண்டது 2022-ல் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இந்த பவி டீச்சர் வந்து நின்றால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.
மேலும் தற்போது உள்ள நிலையில் இணையத்தில் நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இவர் சாதரணமான எளிமையான ஒப்பனைகளுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார். இதோ சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம்…