சேலை கட்டிக்கொண்டு…. சும்மா கபடியில் புகுந்து விளையாடிய பெண்கள்…. செம வைரலாகும் வீடியோ…!!!

பெண்கள் புடவை கட்டிக்கொண்டு கபடி விளையாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.  பெண்கள் எதர்க்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டுதான் உள்ளார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது.

   

பெண்கள் தொடர்ந்து பல துறைகளில் சாதனை மேல் சாதனை செய்து வருகிறார்கள். நகர பெண்கள் மட்டுமல்லாமல் கிராமத்து பெண்களும் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து வருகிறார்கள். அதேபோன்றுதான் சமீபத்தில் பெண்கள் விளையாடிய கபடி போட்டிகள் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. அதாவது கபடி போட்டி என்றால் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அதற்கு ஏற்ற உடையில் தான் விளையாடுவார்கள்.

அப்படி விளையாடினால் தான் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருக்கும். இதையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்கள் ஆடையை அணிந்து நாங்கள் விளையாடுவோம் என்று பெண்கள் சும்மா புகுந்து விளையாடுகின்றனர். இந்த வீடியோ வடமாநிலத்தில் எடுத்தது போல உள்ளது. பெண்கள் சேலை அணிந்து கபடி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…