தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை பல நடிகர்கள் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து கலக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு இவர் தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்தாரா என்னும் அளவிற்கு அவர்களது தோற்றம் முற்றிலும் மாறி விடுகிறது. இன்னும் சிலரோ குழந்தை நட்சத்திரங்களாக நடித்து இருந்தாலும் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போன நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் இருவேடங்களில் நடிக்க எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1958-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றிபடமான ஜப்பானில் கல்யாணராமன். இந்த படத்தில் ராதா, சத்யராஜ், கவுண்டமணி, கோவை சரளா போன்ற பல முன்னனி நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில் படத்தில் கதை முழுவதும் கமலஹாசனுடன் வரும் குழந்தையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அப்போதே தன் நடிப்பத்திறமையால் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் தான் டிங்கு என எல்லாராலும் அழைக்கப்படும் அருண்காந்த். டிங்கு இந்த படத்தை தாண்டி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கல்க்கியுள்ளார். அன்புள்ள ரஜினிகாந்த், வைதேகி காத்திருந்தாள், உயிரே உனக்காக, தேவர் மகன், சரோஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் படங்களை தாண்டி சின்னத்திரையில் கோலங்கள், கனா கானும் காலங்கள், அலை ஓசை, லட்சுமி பல சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.கோலங்கள் தொடர் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் 42-வயதான டிங்கு நடிகர் போஸ் வெங்கட்டின் மச்சானாவார்.டிங்கு நடிப்பைத் தாண்டி நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் மூலம் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 2-ல் கலந்து கொண்டதோடு அதன் டைட்டில் வின்னராகவும் ஆனார். இதன் மூலம் பல திரைப்படங்களில் நடன அமைப்பாளராகவும் பணிபுரிந்தார். இந்நிலையில் 2000-ம் ஆண்டு சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்த திருமண வாழ்க்கை சில கருத்து வேறுபாடு காரணமாக 2010-ம் ஆண்டு இருவரும் சட்டப்படி பிரிந்தனர்.
இப்படி இருக்கையில் கவிதா என்பவரை அதே ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் சென்று வாழ்க்கையை தொடங்கி விட்டார். மேலும் தற்போது நடிப்பைத் தவிர்த்து நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த நிறுவனமும் தற்போது வெகு பிரமாதமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் ராகவா லாரன்ஸின் 2017-ம் ஆண்டு வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படத்தில் வெளியான ஹரஹர மகாதேவகி பாடல் எங்களுடையது என அவர் அளித்த பு கார் சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பியது. இருந்த போதிலும் அது இறுதியில் எல்லா சர்ச்சைகளை போல கா ணாமல் போனது. இவ்வாறான நிலையில் தற்போது நடத்தின் மீது முழு ஆர்வம் காட்டி வரும் டிங்கு விரைவில் தமிழ் சினிமாவில் பணிபுரிய வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.