டாஸ்மாக் கடை திறக்காத அதிருப்தியில் டாஸ்மாக் முன் குடிமகன் செஞ்ச வேலையைப் பாருங்க.. விழுந்து விழுந்து சிரிப்பீங்க..!

இந்தியா முழுவதும் கொரொனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. முதல் அலையோடு ஒப்பிட்டால் இந்த அலையில் உயிர் இழப்புகளும் அதிகம். அதன் காரணமாகவே தமிழகம் உள்பட பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.

   

நம் தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் இல்லாத மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறீவிக்கப்பட்ட மாவட்டங்களில் அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் எங்குமே இதுவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் கொரோனா பெருந்தொற்றுக்கு காரணமாகிவிடும் என்பதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை.

டாஸ்மாக் கடைகள் இல்லாததால் சிலர் வீட்டிலேயே மதுபானங்கள் தயாரித்து போலீஸிடம் சிக்கிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்துவருகிறது. அந்த வரிசையில் இங்கே ஒரு மிஸ்டர் குடிமகன் டாஸ்மாக் கடை இன்னும் திறக்காத அதிருப்தியில் டாஸ்மாக் கடை வாசலில் நின்று அழுது புலம்புகிறார். அவர் சோகத்தோடு டாஸ்மாக் கடை வாசலில் புலம்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்தக் காட்சிகள் உங்களுக்காக…