தண்ணீருக்காக பாட்டிலேயே சுற்றி வந்த காகம்… கடைசியில் நடந்த சம்பவத்தைப் பாருங்க..!

தண்ணீரின் முக்கியத்துவத்தை நம்மவர்கள் இன்னுமே முழுதாக உணரவில்லை. இன்றையும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் பழக்கம் நமக்கு வந்துவிடவில்லை. மிகவும், பெரும்போக்காக தண்ணீரை செலவு செய்துவருகிறோம். இங்கே ஒரு காகம் தண்ணீருக்காக ஏங்கி நிற்பது, நமக்கு எதிர்காலத்தை உணர்த்துவகையில் இருக்கிறது.குறித்த இந்த வீடியோ எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு பாடமாகவும் இருக்கிறது.

   

நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் சொன்னதன் முக்கியத்துவத்தைப் பேசும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. நாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் இதுகாட்டுகிறது. குறித்தக் காட்சியில் சுற்றுலா பயணிகள் சிலர் கூட்டமாக அமர்ந்திருக்கிறார்கள். அப்போது காகம் ஒன்று அவர்களின் அருகில் வந்து நிற்கின்றது. அங்கு இருக்கும் சிறுவனின் கையில் இருக்கும் வாட்டர் பாட்டிலை காகம் ஏக்கத்துடன் பார்க்கிறது.

தொடர்ந்து, அந்த பாட்டிலையே காகம் பார்த்ததால் அந்த சிறுவன் வாட்டர் பாட்டில் மூடியில் தண்ணீரை விட்டு காகத்திடம் காட்டுகிறான். காகம், அதை குடித்துவிட்டுப் பறக்கிறது. இந்த கோடைக்காலத்தில் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் இதேபோல் ஒரு சிறிய பாத்திரத்திலேனும் தண்ணீர் வைத்தால் பறவையினங்கள் தாகமின்றி வாழும். நாமும் முயற்சிக்கலாமே? இதோ இங்கே காகம் தண்ணீருக்காக காத்திருப்பதை நீங்களே பாருங்களேன்…