கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் 44 வயது இவருடைய மனைவி மீனாட்சிக்கு 37 வயது, இவர்களுக்கு நான்காம் வகுப்பு படிக்கும் மகனும் மற்றும் இரண்டம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடிக்கிடப்பதால், அவரது பாடி வீட்டுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, லோகேஸ்வரன் குடும்பத்துடன் ஆம்பூரை அடுத்த கைலாசகிரி மலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சென்றார்கள்.
அங்குள்ள குளத்தில் மீன் பிடித்தபோது குழந்தைகள் இருவரும் கால் தவறி குளத்தில் விழுந்த நிலையில், நீச்சல் தெரியாத லோகேஸ்வரன் கஷ்டப்பட்டு மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார்.
ஆனால், தண்ணீர்ல் விழுந்ததில் மூச்சுத் திணறி குழந்தைகள் உ யிரிழந் ததால், பெற்றோர்கள் கதறி அழுத புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களைக் கலங்க வைத்தது.
பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட குழந்தைகளின் உடல்களைப் பெற லோகேஸ்வரனும் மீனாட்சியும் கதறியபடி இருந்துள்ளனர். குழந்தைகளின் பிரிவால் அவர்கள் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து முதலில் கணவர் குடித்துள்ளார். இரண்டாவதாக மீனாட்சி குடிக்க முயன்ற போது லோகேஸ்வரன் தட்டிவிட்டுள்ளார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் லோகேஸ்வரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அனால் பரிதாபமாக வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் கணவர் உ யிரி ழந்து விட தப்பிய தாய் மீனாட்சி மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த நிலையில் உறவினர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்தச் சென்றுள்ளனர். இந்த இரங்களான காட்சி அந்த சுற்று வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியது.