தளபதி விஜய்க்கு விக்ராந்த் தவிர இன்னொரு தம்பியும் உள்ளார்… யாருன்னு உங்களுக்கு தெரியுமா?…. வைரல் புகைப்படம் உள்ளே….

நடிகர் விஜய்க்கு விக்ராந்த் சகோதரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இளைய தளபதிக்கு மற்றொரு சகோதரரும் உள்ளார். தற்பொழுது அவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான படங்கள் பல சூப்பர் சூப்பர் ஹிட் ஆகியது .அந்த வகையில் தற்பொழுது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி சாதனை படைத்தது.

   

இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 படத்தில் இணைய உள்ள நடிகர் விஜய். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு விக்ராந்த் சகோதரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நடிகர் விக்ராந்த் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக திகழ்கிறார்.

தற்பொழுது நடிகர் விஜய்க்கு விக்ராந்த் மட்டும் தம்பி இல்லை இன்னொரு தம்பியும் உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் விக்ராந்தின் சகோதரர் பெயர் சஞ்சீவ். இவரும் தளபதி விஜய்க்கு தம்பியே ஆவார். அவர் சஞ்சீவ் ஒரு இயக்குனர். இவர் ‘தாக்க தாக்க ‘ என்ற படத்தினை இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் சஞ்சீவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.