திண்டுக்கல் லியோனியின் மகன் யார் தெரியுமா? அவரும் ஒரு ஹீரோ தான்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

திண்டுக்கல் ஐ. லியோனி என்பவர் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர். பட்டிமன்ற பேச்சுக்கள் மூலம் பிரபலமானவர் திண்டுக்கல் ஐலியோனி, இவருக்கு தமிழர்கள் மத்தியில் அறிமுகமே தேவையில்லை. இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது. பல மேடை நிகழ்ச்சிகளில் பேசி வந்தவர் திமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பல காலமாக இருந்து வருகிறது.

   

ஆளும் கட்சியினரை விமர்சிப்பதும், கேலி கிண்டல் செய்வதும் அவரின் பட்டிமன்ற நிகழ்ச்சியில் தவறாமல் இடம் பெறும் விசயம். கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெற்றிருக்கும் திண்டுக்கல் லியோனிக்கு சினிமா மீதும் காதல் உண்டு. இவர் கங்கா கெளரி என்னும் படத்திலும் நடித்திருந்தார். ஆனால் தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி திரைவாய்ப்பு எதுவும் வரவில்லை.

இந்நிலையில் இவரது மகனான லியோ சிவக்குமார் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார், அழகிய கண்ணே என்ற இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரிக்கிறாராம். இன்று முதல் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், ஆர். விஜயகுமார் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை போட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.