நடிகை ஹன்சிகாவின் சமீபத்திய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் ரசிகர்களால் ‘குட்டி குஷ்பு’ என கொண்டாடப்படுகிறார். தற்பொழுது தனது உடல் எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தற்பொழுது அவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ‘மகா’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் நடிகை ஹன்ஷிகா தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறினார். அதாவது இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்பதே அத்தகவல்.
வருகிற 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள பழமை வாய்ந்த அரண்மனையில் சோஹைல் காதோரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் நடிகை ஹன்ஷிகாவின் திருமணத்திற்கான சடங்குகள் தொடங்கிவிட்டது.
நேற்று மட்டா கி சவுகி என்ற சடங்கு நடந்துள்ளது .இதில் அவர் தனது வருங்கால கணவர் இணைந்து எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் நடிகை ஹன்சிகா வித்தியாசமான மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட ஹாட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.