திருமண கோலத்தில் தாலி கட்டும் முன்பு மணப் பெண் செய்த தரமான சம்பவம்..!! உண்மையான சிங்கப்பெண்னே இவங்க தான்..! வைரல் வீடியோ

திருமண கோலத்தில் மணப் பெண் ஒருவர் பரிட்சை எழுதிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் குஜராத்தில் இடம்பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 21 நாட்கள் தீபாவளி விடுமுறை முடிந்துவிட்டது.

   

இதில் ராஜ்கோட்டும் அடங்கும். அங்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இரண்டாவது கல்வி அமர்வு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தீபாவளி விடுமுறைக்குப் பிறகு,

சவுராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் சுமார் 35 வெவ்வேறு தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் திங்கட்கிழமை தனது திருமணத்திற்கு முன்னதாக தேர்வு எழுத மணமகள் உடையில் பெண் ஒருவர் வந்தார்.

வருங்கால கணவர் மற்றும் குடும்பத்தினருடன் தேர்வெழுத வந்த மணமகளின் பெயர் ஷிவாங்கி பாக்தாரியா. தேர்வு முடிந்து மணமகள் நேரடியாக திருமண மண்டபத்தை அடைந்து திருமணத்திற்கான 

அனைத்து சடங்குகளையும் செய்து முடித்துள்ளார்.கல்வி மீது அவர் கொண்ட பற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ