தெறி படத்தில் நடித்த கனிகாவின் அப்பா யாரு தெரியுமா..? அட இவரு தான் அப்பாவா..? புகைப்படம் இதோ

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி என்றால் நடிகை மீனாவைதான் படக்கென சொல்வார்கள். தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை மீனா. ரஜினி அங்கிள் என குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அதே ரஜினியுடன் டூயட் பாடும் அளவுக்கு சினிமாத்துறையில் கோலோச்சினார்.

   

1982ல் வெளியான ‘’நெஞ்சங்கள்’’ படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் மீனா. தொடர்ந்து வந்த அன்புள்ள ரஜினிகாந்த், நடிகை மீனாவுக்கு நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. 1991ல் ‘என்ராசாவின் மனசிலே’ படத்தில் நடிகர் ராஜ்கிரணுக்கு ஜோடியாக அறிமுகம் ஆன மீனா, 90களின் கனவு தேவதையாக வலம்வந்தார்.

திருமணத்துக்கு பின்னர் சிலகாலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவர், இப்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராக தரிசனம் தருவதோடு, மீண்டும் நடிக்கவும் தொடங்கி இருக்கிறார்.

நடிகை மீனாவைப் போலவே அவரது மகளும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். தெறிப்படத்தில் இளையதளபதி விஜயின் மகளாக நடித்தார்.

தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் மீனாவும் அவருடைய மகள் நெறி பேபியையும் எல்லோரும் தெரியும் ஆனால் அவருடைய கணவர் யாருனு பெரும்பாலான சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.