தொகுப்பாளினியால் நிகழ்ச்சி மேடையிலிருந்து இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்.. காரணம் என்ன?

“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை படைத்தார். 1992 ஆம் ஆண்டு, மணிரத்தினம் இயக்கத்தில் “ரோஜா” திரைப்படம் மூலம் இசைதுறையில் அறிமுகமானார் ஏ.ஆர். ரகுமான்.

   

தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரைப் பதித்தார். இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை தந்தது என்றால் அது மிகையாகாது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏராளமான பாடல்களைப் பாடி இசையமைத்து ரசிகர்களின் பட்டாளத்தினை அதிகமாக வைத்துள்ளார். தற்போது 99 சாங்ஸ் என்ற திரைப்படத்தினை தயாரித்து, இதற்கான கதையினை அவரே எழுதியும் உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 16 அன்று வெளியாகவுள்ள 99 சாங்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றதையடுத்து, பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்பொழுது மேடையில் படத்தின் ஹீரோவும், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அத்தருணத்தில் தொகுப்பாளினி ஹீரோவிடம் ஹிந்தியில் பேச முயன்றபோது, உடனே ரகுமான் ஹிந்தி என கூறி விட்டு சிரித்துக் கொண்டே மேடையிலிருந்து இறங்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மானின் இந்த கிண்டலை கண்ட ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.