அழகில் ஹன்சிகாவுக்கு டஃப் கொடுக்கும் அவரது அண்ணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க துவங்கியவர் நடிகை ஹன்சிகா. பின்னர் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோட்வானி. இதன்பின் தமிழில் வெளியான மாப்பிளை, வேலாயுதம், சிங்கம் 2, அரண்மனை உள்ளிட்ட படங்கள் இவரை முன்னணி நடிகையாகியது. ஆனால் சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வரும் ஹன்சிகா, தற்போது மஹா எனும் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

   

சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் அண்ணனுக்கு திருமணம் என்றும், அதன் திருமண வேலைகள் தற்போது சென்று கொண்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை ஹன்ஷிகாவின் சகோதரருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. பிரசாந்த் மோத்வானி, முஷ்கான் உடன் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார். இவர்களின் திருமண நிகழ்வுகள் இருநாள் கொண்டாட்டமாக 2021 மார்ச் 20,21 திகதிகளில் உதய்பூரில் உள்ள Royal Retreat ல் நடைபெற்றது.

திருமண விழா கொண்டாட்டங்கள் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்குகொள்ள ப்ரத்யேகமாக நடைபெற்றது. தற்போது அவர்களின் திருமணப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவுக்கு அவரது அண்ணியார் அழகில் டஃப் கொடுத்துவிடுவார் போல என்று கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..