விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி அர்ச்சனா. சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம், இளமை புதுமை எனும் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அர்ச்சனா. ஆனால் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது கலக்க போவது யார் நிகழ்ச்சி தான் இவருக்கு தொகுப்பாளினி என பிரபலமடைய செய்தது. மேலும் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக நகைச்சுவை கலந்த தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.
ஆம் முதலில் ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த வந்தார் அர்ச்சனா. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி காரணமாக விஜய் டிவிக்கு வந்தார். அதனை தொடர்ந்து தற்போது புதிதாக விஜய் டிவிக்கு தொகுப்பாளினி ஒருவர் வந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, நம் பிக் பாஸ் அர்ச்சனா தான் அது. சமீபத்தில் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான காதலே காதலே எனும் புத்தம் புதிய காதல் நிகழ்ச்சி ஒன்று தொகுத்து வழங்க இருக்கிறார் தொகுப்பாளினி அர்ச்சனா.
இந்நிலையில் அவரின் மகள் சாராவை இணையத்தில் மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர், குறிப்பாக அவரை பலரும் Overmatured என விமர்சித்து உள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சாரா, செம்ம கூலாக பாடல் ஒன்றின் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார்.
View this post on Instagram