நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மகள் போஷிகாவா இது? எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க! புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தாடி பாலாஜி. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும் படிப்படியாக வளர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடுவராகவும், சில நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும் மக்களை மகிழ வைத்து கொண்டு இருக்கிறார். நடிகர் தாடி பாலாஜியியும் அவரது மனைவி நித்தியாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார்கள்.

   

மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஜோடியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை மீடியா மட்டுமின்றி நீதிமன்றம் வரை சென்றது. நித்தியாவை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் இணைந்து நடனமாடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது. பின்பு ஒருவர் மீது ஒருவர் பயங்கர குற்றச்சாட்டினை வைத்து பின்பு சற்று ஓய்ந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே சென்றனர்.

அப்பொழுது இருவரும் மனமாற்றம் ஏற்பட்டு சேர்ந்து விடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இவர்களின் பிரச்சினை தற்போது வரை ஓயாத நிலையில் இருந்து வருகின்றது. இவர்கள் இருவருக்கும் போஷிகா என ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் தாடி பாலாஜியின் மகள் போஷிக்கவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சிறு வயதில் பார்த்ததுபோல் இல்லாமல், நன்றாக வளர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..