நடிகர் அஜித்தின் மகளா இது?… ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் அழகில் இருக்கிறாங்களே… வைரலாகும் புகைப்படம் இதோ…

நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்காவின் சமீபத்திய புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி இருப்பவர் நடிகர் அஜித். இவர் தனது ரசிகர்களால் அன்போடு ‘தல’ என அழைக்கப்படுகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலில் சாதனையும் படைத்தது. தற்பொழுது இவர் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

   

இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அடுத்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் நடிகை ஷாலினியை 2000ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் நடித்த பொழுது இருவருக்கும்  இடையே காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஷாலினி நடிப்பை விட்டு விட்டு தனது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்.

இவர்களுக்கு அனோஷ்கா என்ற ஒரு மகளும் ,ஆத்விக் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித் தனது முழு குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதை பார்த்து ரசிகர்கள் ‘நடிகர் அஜித்தின் மகளா இவர்? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பார் போல இருக்கே’ என்று கமெண்ட் செய்து கொண்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…