நடிகர் அஜித் மனைவி ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… என்ன அழகான ரொமான்டிக் ஜோடி… வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே…

நடிகை ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் நடிகை ஷாலினி. ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் மாதவனுடன் இணைந்து நடித்த படம் ‘அலைபாயுதே’. இத்திரைப்படம் தற்பொழுது வரை இளைஞர்கள் மனதில் நிலைத்து உள்ளது என்றே கூறலாம்.

   

இதைத்தொடர்ந்து ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படத்திலிருந்து நடிகர் அஜித்துக்கும் ஷாலினிக்கு இடையில் காதல் மலர்ந்தது. இவர்கள் 2000ல் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்ட ஷாலினி 2001க்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பிரியாத வரம் வேண்டும்’.  தற்பொழுது இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நடிகை ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த பார்ட்டியில் நடிகர் அர்ஜுன் உட்பட சில முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் அஜித் ஷாலினி இணைந்து எடுத்துக்கொண்ட அழகான ரொமான்ஸ் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….