நடிகர் ஜீவா தந்தை தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரி , திரைப்பட நடிகரான ரமேஷ் இவரது உடன் சகோதரர் தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஜீவாவின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத தகவல் நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து உள்ளார்.
நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மட்டுமே நடித்துக்கொண்டு உள்ளார். கடைசியாக வெளிவந்த கீ படம் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்டது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஜீவா தனது மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அழகிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.நடிகர் ஜீவா தனது மனைவி சுப்ரியாவுடன் எடுத்த கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், ”எனது Childhood Sweetheart-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளிலும், மேடு பள்ளத்திலும், ச ண்டையிலும் சந்தோஷத்திலும், வீடியோகேம்ஸ் முதல் பாத்திரம் கழுவுவது வரையிலும் என பிறந்தநாள் வாழ்த்தை க்யூட்டாக தெரிவித்துள்ளார் ஜீவா.
இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அது மாத்திரம் இன்றி, நடிகர் ஜீவாவின் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.