நடிகர் ஜெயம் ரவியின் அம்மா அப்பாவின் 50வது திருமண நாள் கொண்டாட்டம்… வைரலாகும் புகைப்படம்… குவியும் வாழ்த்துக்கள்…

நடிகர் ஜெயம் ரவி தனது அம்மா அப்பாவின் 50வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடி உள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் திரைப்படத்தொகுப்பாளரும், தயாரிப்பாளமான மோகனின் இளைய மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. இவர் தனது சினிமா பயணத்தை ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவி இயக்குனராக தொடங்கினார்.

   

இதை தொடர்ந்து அவர் தந்தை தயாரித்த இரண்டு தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2002ல் இவர் நடிப்பில் வெளியான ‘ஜெயம்’ திரைப்படம் இவருக்கு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து இவர் நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி என அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. நடிப்பு, நடனம், உடலமைப்பு, சண்டை காட்சி, ரொமான்ஸ் என அனைத்திலும் அசத்தி வந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்நது இவர் நடிப்பில் சில முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது தாய் மற்றும் தந்தையின் 50வது திருமண நாளை தற்போது குடும்பத்துடன் திருத்தணி கோயிலுக்கு சென்று கொண்டாடிள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவரின் அண்ணன் மோகன் ராஜா இப்புகைப்படத்தினை பதிவிட்டு ‘ஐம்பது வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கு திருமணம் ஆன அதே இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்’ என்று பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்….