நடிகர் நானியின் மகனை பாத்திருக்கீங்களா?…. உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா?…. வைரலாகும் புகைப்படம் உள்ளே…

நடிகர் நானி தனது மகனுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறி தனது இணையதள பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

தெலுங்கு திரை உலகை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தமிழில்’ நான் ஈ’ படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். இவரின் நிஜ பெயர் நவீன் பாபு கண்டா. படத்திற்காக இவர் தன் பெயரை நானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார்.

   

2008 இல் வெளியான  ‘அட்டா சம்மா’  என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை இவர் 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் நான் ஈ , ஆகா கல்யாணம், வெப்பம், நீதானே பொன்வசந்தம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சியாம் சிங்காராய் திரைப்படம்  நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து அவர் நடிகை நஸ்ரியா உடன் இணைந்து அடடே சுந்தரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் நானி  2012ல்  அஞ்சனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் அர்ஜுன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று  உலகமே குழந்தைகள் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தது.  நடிகர் நானியும்  தனது மகனுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறி தனது மகனின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த பதிவு ….

 

View this post on Instagram

 

A post shared by Nani (@nameisnani)