நடிகர் பிரபுவின் மருமகளை பார்த்ததுண்டா? அட இவ்வளவு அழகா! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்..

நடிகர் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் இருக்கும் அட்டகாசமான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிவாஜி கணேசனின், அவரது மகன் நடிகர் பிரபு, இவரது மகனான விக்ரம் பிரபு என மூன்று தலைமுறைகளில் திரையுலகினை ஆக்கிரமித்து நடிப்பில் அசத்தி வருகின்றனர்.

   

இந்நிலையில் விக்ரம் பிரபு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.

இத்திரைப்படம் விக்ரம் பிரபுவின் சினிமா வாழ்விற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த வகையில் தற்போது கும்கி 2 திரைப்படம் இவர் நடிப்பில் உருவாகி வருகிறது.

விக்ரம் பிரபு லட்சுமி உஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டதுடன், இந்த தம்பதிகளுக்கு குழந்தைகளும் இருக்கின்றனர்.இந்நிலையில் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளையே ஓவர்டேக் செய்துவிடுவார் போல என்று விக்ரம் பிரபுவின் மனைவியின் அழகை பார்த்து பலர் பிரமித்து வருகின்றனர்.