நடிகர் மகேஷ்பாபு கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? இந்த பிரபல நடிகையா இது!! வாயடைத்துப்போன ரசிகர்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை மறக்க முடியுமா என்ன. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். இப்படத்தில் லதா பாண்டியாக நடித்து ரசிகர்களின் மனத்தில் அழகான கிராமத்து பெண்ணாக இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படம் தான் இவருக்கு இன்று வரை அடையாளமாக அமைந்து வருகிறது.

   

அதன் பின் இவருக்கு ஜீவா, ஈட்டி, பெங்களூரு நாட்கள், பென்சில், காக்கி சட்டை, ரெமோ, மருது என பல படங்கள் வந்தாலும் பெரியளவில் முக்கியத்துவம் இல்லாமலே இருப்பது போலிருக்கிறது. நடிகை ஸ்ரீ திவ்யா மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து பின்னர் கதாநாயகி ஆனவர். தெலுங்கு படங்களில் நடிக்கு வாய்ப்புகள் தேடி வர அவரும் அதனுடன் சங்கமாகிவிட்டார். சோசியல் மீடியாக்களில் போட்டோ போட்டு அப்டேட் செய்வதை தொடர்ந்து வரும் அவரின் பழைய கால போட்டோ ஒன்று கையில் சிக்கியுள்ளது.

இப்போது சமூக வலைத்தளத்தில் 2000 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான யுவராஜ் என்ற படத்தில் ஸ்ரீ திவ்யா குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அப்போது அப்படத்தில் மகேஷ் பாபு ஸ்ரீ திவ்யாவை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.