நடிகர் வடிவேலுவுடன் புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா..?- இந்த நகைச்சுவை நடிகரின் பொண்ணா இது வயடைத்துப்போன ரசிகர்கள்..

பிரபலங்களின் வாரிசுகள் சினிமா பக்கம் வருவது ஒன்றும் புதிதல்ல. இதற்காக பாலிவுட்டில் ஒரு பெரிய சண்டையே உருவாகி இருக்கிறது அது வேறு விஷயம்.தமிழ் சினிமாவில் இன்னும் அப்படிபட்ட பிரச்சனைகள் எழவில்லை என்றாலும் பிரபலங்களின் வாரிசுகள் அறிமுகமாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்போது வடிவேலுவுடன் ஒரு குழந்தை இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது யார் என்று ரசிகர்களுக்கு தெரியவே இல்லை.

இந்த நிலையில் தான் அவர் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கதாநாயகனாக, நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக, ஒளிப்பதிவாளராக பல முகங்களைக் கொண்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற ஆம் ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார்.

தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.1996 ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தரப் புருசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். பின் தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு லிவிங்ஸ்டனுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. இவர் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்துவரும் ஜோவிதா என்பவர் தானாம்.இவர் வேறுயாரும் இல்லை பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *