நடிகை காஜல் பசுபதி தனது முன்னாள் கணவரான சாண்டி மாஸ்டரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை காஜல் பசுபதி. திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் . சன் தொலைக்காட்சியின் கஸ்தூரி தொடரில் வில்லியாக நடித்திருந்தார்.’வசூல்ராஜா’ திரைப்படத்தில் நர்ஸ் வேடத்தில் நடித்துள்ளார் .
இவர் டிஷ்யூம், கள்வனின் காதலி போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை திரையுலகில் ஏற்படுத்தி உள்ளார் .பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளராக பங்கேற்றார். பிரபல நடன ஆசிரியர் சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் .
இவர்களின் விவாகரத்துக்கு பின்னர் சாண்டி மாஸ்டர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தனது முதல் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருந்தாலும், அந்த குடும்பத்துடன் நட்புடனே இருந்து வருகிறார் காஜல்.
அடிக்கடி அவர்களின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்பொழுது இவர் சாண்டியின் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
இதோ அந்த பதிவு….
View this post on Instagram