பிரபல நடிகை ஒருவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நடிகை நயன்தாராவை போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகை நயன்தாரா இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் 2003 இல் வெளியான ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து 2005 இல் வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார்.
தனது முதல் படத்திலேயே தனது கொள்ளை கொள்ளும் கொழுக் முழுக் அழகால் ரசிகர்களை கவர்ந்தார். இப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வரும் இவரை ரசிகர்கள் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கின்றனர்.
தற்பொழுது இவர் பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்படும் கதைகளை மிக கவனமாக கேட்டு தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார். மேலும் இவர் நடிப்பில் தற்போது கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் போன்ற திரைப்படங்கள் உருவாகிக் கொண்டு வருகிறது.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் தற்பொழுது இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை நயன்தாராவை போலவே பார்ப்பதற்கு அச்சு அசலாய் இருக்கும் பிரபல நடிகை ஒருவரின் புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது.
அந்த பிரபல நடிகை வெளியிட்ட சில புகைப்படங்கள் அப்படியே நயன்தாராவை போல உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த பிரபல நடிகை வேறு யாருமில்லை நடிகை அனிகா தான். இவர் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். சமீபத்தில் இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை நயன்தாராவை போல இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.