நயன்தாரா இரட்டைக் குழந்தைகளை பார்க்க சென்ற பிரபல தமிழ் நடிகை…. இணையத்தில் வைரலாகும் க்யூட் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணமுடிந்து இருவரும் வெளிநாடுகளில் ஹனிமூன் சென்ற நிலையில் பல புகைப்படங்களையும் அவ்வபோது இணையத்தில் பகிர்ந்தனர். அதே சமயம்சமீபத்தில் வாடகை தாய் மூலமாக இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

   

பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப வாடகை குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்த நிலையில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து அண்மையில்தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் க்யூட்டான வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது நயன்தாராவின் இரட்டைக் குழந்தைகளை பார்ப்பதற்கு நடிகை ராதிகா சரத்குமார் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் இவனுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது twitter பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.