புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நாட்டுப்புறப் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
மக்கள் பெரும்பாலும் நடனம், இசை போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். தற்போதயெல்லாம் நாட்டுப்புற கலைகள் அனைத்தும் அழிந்து கொண்டு வருகின்றது. இதனை மீட்டெடுக்கும் முயற்சியில் பலரும் இறங்கியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் கட்டாயம் நம்முடைய பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். அவற்றை அழிய விடக்கூடாது என்று பலரும் பாடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர் கலை நயத்துடன் நாட்டுப்புறப்பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் நாட்டுப்புறப் பாடலுக்கு அவர் அவ்வளவு கலை நயத்துடன் நடனம் ஆடுகிறார். இதை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….