விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளில் இரண்டாவது பிரமோ தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது 41 வது நாளே கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்பொழுது 16 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் நிவாஷினி தான் குறைந்த வாக்குகள் பற்றி வெளியேறுவார் என்று சமூகவலைத்தளங்களில் உறுதியான தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய உண்மையான முகத்தை காட்டத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது பிரமோ வெளியாகி உள்ளது, இதில் இதில் கமல் ‘யார் வில்லாளி? யார் எய்யப்பட்ட அம்பு’ என்று போட்டியாளர்களிடம் கேட்க, அதற்கு சிவின் உடனே எழுந்து நின்று ‘வில்லாக அமுதவாணனையும், அம்பாக ஜனனியையும்’ குறிப்பிடுகிறார்.
இதைத்தொடர்ந்து எழுந்த ரக்ஷிதா, ADK, விக்ரமன் என பல போட்டியாளர்கள் ஜனனியையும், அமுதவாணனையுமே கூறுகின்றனர். ஆனால் ஜனனி எழுந்து நின்று ADK மற்றும் விக்ரமனை கூறுகிறார்.
இதை கவனித்த கமல்ஹாசன் ‘நிறைய அம்பு வாங்கி இருக்கீங்க உங்களுக்கு தெரியும் தானே’ எனக் கூற ஜனனி செய்வதறியாமல் முழிக்கிறார். தற்பொழுது இந்த பிரமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வைரல் ப்ரோமோ இதோ…..