‘நீ ஏன் என்கிட்ட பேசுற?… என்கிட்ட பேசாத…’ சிவினிடம் கோபத்தில் கத்தும் தனலட்சுமி… வைரல் பிரமோ இதோ….

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளின் இரண்டாவது பிரமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பரபரப்பாக ஓடி கொண்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி 41வது நாளை கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தற்பொழுது 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

   

இந்நிகழ்ச்சியில் இருந்து இறுதியாக நிவாஷினி வெளியேறி உள்ளார். தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளின் இரண்டாவது பிரமோ வெளியாகி உள்ளது. இதில் தனலட்சுமிக்கும் சிவினுக்கும் இடையில் பயங்கரமான சண்டை ஏற்பட்டுள்ளது. தலைவர் போட்டியில் தோல்வியடைந்த தனலட்சுமி தற்பொழுது சக போட்டியாளர்களிடம் தனது கோபத்தை காண்பித்து வருகிறார்.

இந்த ப்ரோமோவில் மைனா நந்தினி தனலட்சுமியிடம் ‘உனக்கு என்ன பிரச்சனை’ என கேட்கின்றார். அதற்கு உடனே தனலட்சுமி முன்னாடியே ‘டீம் பிரிச்சாச்சு தானே’ என்று ஜனனியிடம் கூறுகிறார்.

அதோடு மட்டும் இல்லாமல் ‘ஏன் அந்த ரெண்டு பேர் மட்டும் அப்படியே இருக்கணும்?’ என கேட்கிறார். உடனே சிவின் நடுவில் பேச அதற்கு ‘நீ உன் பாய்ண்ட என் முன்னாடி எடுத்து வைக்காத..நீயே என்கிட்ட பேசுற? இனிமேல் பேசாதே’ என்று கோபத்துடன் கத்துகிறார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ…