நடிகை ஸ்ரித்திகா, பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர். சீரியல் நடிகை மட்டுமில்லாமல் சில படங்களிலும் நடித்துள்ளார். கலசம், நாதஸ்வரம், வைதேகி, கோகுலத்தில் சீதை, உறவுகள் உள்ளிட்ட சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், தற்போது பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “மகராசி” என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஸ்ரித்திகா.
தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்நடிகை ஸ்ரித்திகா அவர்கள். சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் “வெண்ணிலா கபடி குழு” என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது கூட சீரியலில் நடித்து வரும், சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வருகிறார்.
குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை ஷேர் செய்த வண்ணம் உள்ளார், அந்த வகையில் தற்போது பச்சை வண்ண காட்டன் சேலையில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரித்திகா அவர்கள். இந்த போட்டோஸ் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது என்று சொல்லலாம்…
View this post on Instagram